திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலமாக போற்றப்படக்கூடியது திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோயில். இந்த ஆலயத்தில் தான் தற்போது மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையானது நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், பயபக்தியுடனும் இந்த விழாவில் பங்கேற்று சாமி சரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 31ம் தேதி இந்த கும்பாபிஷேகத்திற்கான யாக குண்டங்கள், பூஜைகள் தொடங்கின. மொத்தம் 128 யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டு, தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பு பூஜைகள் அனைத்துமே நடைபெற்றது.

இதனுடைய முத்தாய்ப்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு 12ம் கட்ட யாக பூஜையானது தொடங்கியது. இந்த யாக பூஜைகள் முடிவடைந்ததையடுத்து காலை 7.15 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் கலசங்கள் 6-ம் யாக சாலையில் இருந்து புறப்பட்டு கிளி கோபுரம் வழியாக சாமி, அம்மன், சம்பந்த விநாயகர், முருகர் உள்ளிட்ட சன்னதிகளின் விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.காலை 9.15 மணி அளவில் கோவிலின் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பேயகோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளிகோபுரம் உள்பட 9 கோபுரங்கள், மூலஸ்தானம், அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் உள்பட 11 விமானங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடை பெற்றது. கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர்.

காலை 10.05 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மன் உள்ளிட்ட 11 கருவறைகளில் உள்ள மூலவர்களுக்கும் புனிதநீர் ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.பக்தி முழக்கத்தில் திழைத்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீது மின் மோட்டார் பொருத்தப்பட்ட நவீன கருவிகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலை யாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் விண்ணை பிளந்ததால் திருவண்ணாமலையே சிவமயமாக காட்சி அளித்தது.உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரே பிரதிஷ்டை செய்த புதிய கொடி மரத்திற்கும் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் உள்புறம் உள்ள மேல் தளங்களில் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.கோவில் கும்பாபிஷேக விழாவில் லட்சக் கணக்கில் பக்தர்கள் திரண்டு இருந்தனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top