நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பல்வேறு வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. 9 ம் திருவிழாவான இன்று காலை கோயிலில் சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் இருந்து சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பட்டனர். சிறப்பு பூஜையுடன் தேரோட்டம் நடைபெற்றது. தேர் நிலை நின்றவுடன் தீர்த்தவாரி மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சாயரட்ச பூஜை, ராக்கால பூஜையும், இரவு 1 மணிக்கு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. இரவு வழக்காடு மன்றமும், இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.. 10ம் திருவிழா நாளை காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா மற்றும் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு திருக்கோயில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளல், அதனைத் தொடர்ந்து தெப்ப உற்சவமும், நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top