தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது... இதனையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கொடியேற்றப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் . மாசித்திருவிழாவின் 5 ஆம் திருநாளான மார்ச் 5 ம் தேதி மேலக் கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.


பின்னர் சுவாமியும் அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். மார்ச் 6 ம் தேதி காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதியுலா வருகின்றன. 7 ம் தேதி அதிகாலையில் சண்முக பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.


அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மாலை சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலா வருவார். 8 ம் தேதி பெரிய வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி எழுந்தருளி மேலக்கோவில் வருவார். நன்பகல் 11.30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 10 ம் தேதி (வெள்ளிக்கிழமை ) நடைபெறுகிறது. 11 ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 4 ம் நாள் திருநாளான வருகிற 4 ம் தேதி அதிகாலை 4 மணிக்கும், 7ஆம் திருநாளான மார்ச் 7 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கும் கோவில் நடை திறக்கப்படும். மற்ற திருநாள்களில் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்..மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top