ஆந்திராவில் அமைந்துள்ள, திருப்பதி திருமலை கோவிலில் தரிசனம் செய்வதற்கு, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் குறித்து, பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், முதன்முறையாக, கோவிலின் பல்வேறு பகுதிகளில், நேரடியாக, கோவிலின் சிறப்பம்சம் குறித்து விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள குறும்படம் ஒன்றை ‘நேஷனல் ஜியாகரபி’ என்ற, ‘டிவி’ சேனலில் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது.

இந்த படத்தை எடுத்த ராஜேந்திர ஸ்ரீவத்சா கோண்டபள்ளி என்பவர், “உலகின் மிகப்பெரிய சமையலறை என்ற பெயரில், திருமலை கோவில் சமையலறை குறித்து படம் எடுக்க விரும்பினோம். அதற்கான அனுமதி கிடைத்து, படம் எடுத்தோம். அப்போது தான், இந்த கோவிலின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து தெரிய வந்தது. அதை தொடர்ந்து, கோவில் ஆகம விதிகளை மீறாமல், கோவிலின் பல்வேறு பகுதிகள் குறித்தும் படம் எடுத்தோம். கோவிலின் கருவறை, பக்தர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தும் முறை என, பல பிரமிப்புகள், இந்த படத்தை பார்க்கும் போது ஏற்படும்”என்று அவர் கூறினார்.

இதனிடையே திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடாகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் கூட்டாக தெரிவித்ததாவது:- “கோடை கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே ஏப்ரல் 7-ந்தேதி முதல், 10 வாரங்களுக்கு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. எல்-2, எல்-3 ஆகிய பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் சிபாரிசு கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் வி.ஐ.பி. எல்-2, எல்-3 ஆகிய தரிசனத்தில் பக்தர்களும், சிபாரிசு கடிதங்களும் அனுமதிக்கப்படுகின்றன. வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர். சாதாரண பக்தர்களுக்கு தரிசன ஏற்பாட்டில் முன்னுரிமை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று
அவர்கள் தெரிவித்தனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top