மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் சுந்தரேஸ்வரருக்கு வண்ணப் பட்டும், மீனாட்சி முத்துக்கொண்டை போட்டு வைரக்கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்கக்காசு மாலை, ஒட்டி யாணம் உள்ளிட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மாற்றி கொண்டனர். பின்னர் மந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகள் தொடங்கி, மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

பல்வேறு பூஜைகளுக்கு பின் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டி ,நிறைவாக மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருமணம் முடிந்தவுடன் கூடியிருந்த பெண்கள் தாலியில் சந்தனம், குங்குமம் வைத்தும், நெற்றியில் பொட்டும் வைத்துக் கொண்டனர். சில பெண்கள் மீனாட்சிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட நேரத்தில் தாங்களும் புதுத்தாலி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்க கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கட்டிய கயிறு, குங்கும டப்பா போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சித்திரை வீதிகளில் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top