வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. நம் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச் சிறப்புடையதுதான். இவற்றில் வைகாசி மாதத்தினை மாதவ மாதம் என்பர். இம்மாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால் பேறுகள் பல பெறலாம். பிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றது வைகாசி விசாக பௌர்ணமியில். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் வைகாசி விசாகத்தில்தான். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை உமையவள் ஒரே குழந்தையாக சேர்த்த நாள் வைகாசி விசாகம். விசாகமான இன்றைய தினத்தில் முருகனின் எல்லா திருத்தலங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகன் ஆலயம் சென்று வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண் டம் அமைத்து வழிபட வேண்டும். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும். பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலை கள் அணிவித்து அர்ச்சனை செய்தால் பாவங்கள் அகலும், புண்ணியங்கள் பெருகும். அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான். அதுமட்டுமின்றி கும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும். திருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் இன்றைய வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெற்ரது. இன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்தார்கள். மேலும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு முருகன் திருத்தலங்களில் பக்தர்கள் விசேஷ வழிபாடு செய்தனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top