கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு செய்பவர்களுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியது நினைவிருக்கும். இந்நிலையில் தற்போது திருப்பதி லட்டு பெற பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக வெளி வந்துள்ள செய்தியைக் கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகள், மானியம் பெற என ஆதார் கட்டாயம் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்து இருந்தது. இதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் அரசின் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் ஆக்க கூடாது என மத்திய, மாநில அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், இந்த உத்தரவை மத்திய மாநில அரசு கண்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் திருப்பதி லட்டுபெற ஆதார் கட்டாயம் வேண்டும் என்று தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வரும் பக்தர்களுக்கு இலவச தரினசத்தில், பக்தர்கள் ஒருவருக்கு 2 லட்டுகளும் ரூ.300 கட்டண தரிசனத்தில் பக்தர் ஒருவருக்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக லட்டு வேண்டுவோர் தேவஸ்தான லட்டு கவுண்டரில் கூடுதல் கட்டணம் செலுத்தி லட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம். இது பக்தர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

இதனிடையே, கூடுதல் லட்டு பெற ஆதார் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு இது நடைமுறைக்கு வரும் என தெரியவருகிறது. தேவஸ்தானத்தின் இந்த திடீர் முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை தேவஸ்தான நிர்வாகம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top