இந்து மதத்தில் சைவ பிரிவை தழைத்தோங்கச் செய்தவர்களில் திருஞான சம்பந்தர் குறிப்பிடத் தகுந்தவர். மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டிய மன்னன் காலத்தில் சமண மதம் பரவியது. இதையடுத்து, கூன்பாண்டியன் மனைவி சுந்தரேஸ்வரரை மனம் உருக வேண்டினார். மன்னனுக்கு வெப்பு நோயை ஏற்படுத்தினார் இறைவன். இந்நோயை சமணர்களால் குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஞான சம்பதருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மதுரைக்கு வந்து, கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.

இதையடுத்து, மதுரையில் சைவ மதத்தை வளரச் செய்யும் வகையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் ஆதீனத்தை நிறுவினார் ஞானசம்பந்தர். திருஞான சம்பந்தரால் நிறுவனப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரி உள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி நித்தியானந்தர், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்படுவதாக அருணகிரி அறிவித்தார். இதில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து நித்தியானந்தரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்கி, அருணகிரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனத்தை நியமனம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று காலை மதுரையில் நிருபர்களை சந்தித்த ஆதீனம் அருணகிரி, “மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பட்டம் சூட்டப்படுவதாக முறைப்படி அறிவித்தார். அருணகிரி மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக வந்த பின்னர், இப்போது நான்காவது முறையாக மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூன்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top