நீரின்றி அமையாது உலகு... பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அப்பூஸ்தலமான திருவானைக்கோயில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் அமையப்பெற்ற ஜெம்புகேஸ்வரர் சன்னதியில் எப்பொழுதும் நீரில் மிதந்தபடி சிவன் காட்சித் தருவார் அது ஒரு கனாக்காலம் அந்த காலங்களில் மழைகால சீசன்களில் சன்னதியில் இரவு பூஜை முடிந்தபின் காலையில் கோவில் நடை திறக்கும் பாரதமிகு மின் நிறுவனத்தில் இருந்து ஃபயர் எஞ்சின் மூலமாக இரவு முழுவதும் தேங்கி நீர் அகற்ற பட்டபின் காலைச்சந்தி பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவந்தது. ஆனால் தற்பொழுது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் அள்ளப்பட்டு வருவதால் ஊரே வறண்ட பாலைவனமாக காட்சியளிப்பதோடு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு கடுமையான அனல் காற்றுடன் வெயில் விளாசி தள்ளுகிறது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் கோயில் குளத்தை சீர் படுத்தி குப்பைகளை அகற்றும் பணியினை மேற்கொண்டனர். ஆனால் குப்பைகளை அகற்றினால் மட்டும் போதுமானதாக இருக்காது குளத்திற்கு நீர் வரும் வழியை அடைத்து அனுமதிபெறாமல் கட்டிடங்கள் எழுப்பியவர்களை தண்டிக்க வேண்டும் நீர் குளத்தை அடைவதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது கண்டுகொள்ளுமா மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும்?!மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top